Princiya Dixci / 2016 மே 25 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
ஆடிம்பலமப் பிரதேசத்தில் பாடசாலை செல்வதற்காக தனது தாயாருடன் வீதியைக் கடந்த மாணவன் ஒருவன், தனியார் பஸ் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (24) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஆடிஅம்பலம வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்ற சுமித் விஸ்வ சாரங்க என்ற 14 வயது மாணவனே பலியாகியுள்ளார்.
பஸ்யால பிரதேசத்திலிருந்து கதிரானையில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையொன்றுக்கு ஊழியர்களை ஏற்றி வந்த தனியார் பஸ்ஸே இவ்வாறு மாணவனையும் தாயாரையும் மோதியுள்ளது.
கட்டுநாயக்கப் பொலிஸார் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
52 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
19 Nov 2025