Princiya Dixci / 2016 மே 11 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் டெங்குப் பிரிவு (வார்ட்) உட்பட ஏனைய பலவற்றில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, கட்டானை, சீதுவை, குரணை மற்றும் கொச்சிக்கடை உட்பட நகரின் பல பிரதேசங்களிலும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் காலங்களில் நுளம்புகள் அதிகரித்து டெங்கு காயச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் எனவும் இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வெண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
5 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago