Princiya Dixci / 2015 நவம்பர் 09 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனை என்ற போர்வையில் விபசார விடுதியை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியின் முகாமையாளரும் மூன்று பெண்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பெண்கள் 23, 22 மற்றும் 20 வயதுகளையுடைய காலி, கெக்கிராவ மற்றும் கொபோகன்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .