2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மாகாண சபைகளின் புதிய அதிகாரப் பகிர்வு தொடர்பான மாநாடு ஆரம்பம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைகளின் புதிய அதிகாரப் பகிர்வும் அதற்கான தீர்வும் தொடர்பான மாநாடு, நீர்கொழும்பு ஹெரிடேன்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கிய ஜோதி சரவணமுத்து தலைமையில் இன்று சனிக்கிழமை (06) ஆரம்பமானது.

இம்மாநாடு, நாளையும் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் இலங்கையின் சகல மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு கலந்துகொண்ட ஒவ்வொருவரும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் முக்கிய விடையங்களை முன்வைத்தனர்.

இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அங்கு உரையாற்றும்போது,

'இன்றைய மாகாண அதிகாரங்கள் பெயரளவிலேயே இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் எங்களால் ஒரு விடையத்தையேனும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. உதாராணமாக கடந்த வாரம் கிழக்கில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால்,  அதில் வயதெல்லை குறிப்பிடப்பட்டிருந்தது. இதுசம்மந்தமாக நான் அவசரமாக இது தொடர்பானவர்களைத் தொடர்பு கொண்டபோது அது மத்திய அரசின் நடவடிக்கை என்று பதில் கிடைத்தது.

'ஆனால், இங்கு நடைபெறும் இந்த முக்கிய இம்மாநாட்டில் கூறி விரும்புகிறேன். யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகள் காரணங்களில் கல்வியைப் பின்போட்ட மாணவர்களின் பட்டப்படிப்பு தாமதமாகியதன் காரணமாக வயதெல்லைகள் கூடிய பட்டதாரிகள் இன்று அதிகமானவர்கள் காணப்படுகின்றனர்.

'எனவே, உடனடியாக விண்ணப்பம் கோரப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் கோரலில் உடனடியாக வயதெல்லையை மாற்றவேண்டும் என்பதனை இம்மாநாட்டில் கூறிவைக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X