Princiya Dixci / 2016 மே 25 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய எண்ணங்கள் மற்றும் உத்திகளின் ஊடாக கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சகல அரச நிறுவனங்களும் தமக்கிடையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 30ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு, ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் விழாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
'இலங்கையை ,ணைத்த முடிவற்ற பணி' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் 25 வருடங்களாக பணியாற்றும் 360 ஊழியர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களில் 10 ஊழியர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் விருதுகளை வழங்கி வைத்தார்.
அரசினுடைய பணிகளை நிறைவேற்றும்போது அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையில் பிரிவுகளை பார்க்கமுடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தத்தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவது அவர்கள் எல்லோரினதும் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.
அரச வளங்கள் மற்றும் சொத்துக்களை பயன்படுத்தி அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும்போது அவற்றை முறையாக நிர்வாகம் செய்வது மட்டுமல்லாது நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மையினை சரியான முறையில் பேணுதல் தொடர்பிலும் கூடியளவு கவனம் செலுத்தவேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரச வளங்கள மற்றும் சொத்துக்களை பயன்படுத்தும்போது அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்றோமா என்பது தொடர்பில் உங்களுடைய மனட்சாட்சிகளை நீங்களே கேள்வி கேட்டுப்பார்க்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, சுதந்திரத்துக்குப் பின்னர் கடந்த ஆறு தசாப்தங்களாக அரச வளங்களை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் அபிவிருந்தியில் நாம் பாரிய வளர்ச்சியை அடைந்திருக்க முடிந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மற்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசினையும் வழங்கி வைத்தார்.
அமைச்சர்களான தயா கமகே, டி.எம்.சுவாமிநாதன், சந்திராணி பண்டார, கயந்த கருணாதிலக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியஆராச்சி, பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல். குணரத்ன மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
5 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago