Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
களுத்துறை மாவட்டத்தில் வசித்துவரும், வெளிநாடு சென்று நாடு திரும்பிய நபர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு, பொலிஸ் நடமாடும் வாகனம் மூலம் மாவட்டத்தின் சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் நேற்று (16) இரவு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, களுத்துறை பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல முடியாதவர்கள் 119 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் களுத்துறை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
44 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
2 hours ago