2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்.மாவட்டத்தில் மதுவரி திணைக்களத்தினால் ஜூலையில் 134 பேருக்கு எதிராக வழக்கு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                         (ரஜனி)
யாழ். மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் முற்படுத்தி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவி அத்தியட்சகர் என்.சோதிநாதன் தெரிவித்தார்.

யாழ். மதுவரி நிலையத்திற்குட்பட்ட பிரசேதங்களில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்தவர்கள், மற்றும் தொழில்நுட்ப ரீதியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட 48 பேருக்கு எதிராகவும் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேவேளை, பருத்தித்துறை மதுவரி நிலையத்திற்குட்பட்ட பிரதேச வர்த்தகர்களுக்கு எதிராக சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்தமை தொடர்பாக 11 வழக்குகளும்,  தொழில்நுட்ப குற்றச்சாட்டு தொடர்பாக 2 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

மல்லாகம் மதுவரி நிலையத்திற்குட்பட்ட பிரதேச வர்த்தகர்களுக்கு எதிராக 24 வழக்குகளும், சாவகச்சேரி பிரதேச வர்த்தகர்களுக்கு எதிராக 15 வழக்குகளும் சங்கானையில் 34 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறுவர்களுக்கு சிகரெட் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபடும் விற்பனை நிலையங்களில் தொடர்ந்தும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட விரோத மதுபான விற்பனை மற்றும் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு  சிகரெட் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கெதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் மதுவரி திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X