2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ். கொழும்பு சேவையில் ஈடுபட 22 பேரூந்துகளுக்கு மட்டுமே அனுமதி

George   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - கொழும்பு சேவையில் ஈடுபட 22 பஸ்களுக்கு மட்டுமே அனுமதியிருப்பதாகவும், ஏனைய பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடமுடியாது என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போNது, அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் - கொழும்பு சேவையில் ஈடுபடும் பஸ்களை ஏ – 9 வீதியில் கடமையில் ஈடுபடும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தி வருகின்றனர். அத்துடன் கைதடி மற்றும் மிருசுவில் பகுதிகளில் விஷேடமாக அனுமதிப்பத்திர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வழித்தடங்கல் அனுமதியில்லாத எந்த பஸ்ஸூம் சேவையில் ஈடுபடமுடியாது. அத்துடன், வழித்தடங்கல் சேவையிலுள்ள பஸ்களின் இலக்கங்கள் பொதுமக்களுக்கு பகிரங்கமாக விரைவில் அறிவிக்கவுள்ளோம்.

,தன்மூலம் வழித்தடங்கல் அனுமதியில்லாத பஸ்களில் பயணங்களை மேற்கொண்டு எதிர்கொள்ளும் தேவையில்லாத சிரமங்களை பொதுமக்கள் தவிர்த்து கொள்ள முடியும்.

வழித்தடங்கல் அனுமதியில்லாத பஸ் ஒன்று பயண பாதையை மாற்றி, புத்தூர் வீதி வழியாக சென்று கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்ததுடன், 20 பேர் வரையில் படுகாயமடைந்திருந்தனர்.

ஆகவே; மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும்.

மேலும், வழித்தடங்கல் அனுமதியுள்ள 4 பஸ்கள் மீது ,னந்தெரியாத நபர்களால் கடந்த வாரம் கல்வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .