2025 மே 19, திங்கட்கிழமை

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 பேர் யாழ். குடாநாட்டில கைது

Super User   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். குடாநாட்டில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 பேர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய உதவி பரிசோதகர் விக்கிரமாராட்சி தெரிவித்தார்.

யாழ் பிரதேசத்தில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக யாழ். பொலிஸார் விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரித்ததார்

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நாளை வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

இதேவேளை, யாழ். திருநெல்வேலி பகுதியில் வீட்டினை உடைத்து தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்ட மூவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேரசாச நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு வருட சிறை தண்டணை வழங்கியுள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு ஜுன் 13ஆம் திகதி வீடு உடைத்து வீட்டில் உள்ள தங்க ஆபரணங்களைத் திருடியவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளாக இனங்கண்ட நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டணை வழங்கித் தீர்பளித்துள்ளது

நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இவர்களால் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X