2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ரூ.7,500 மில்லியன் வேலைத்திட்டங்கள்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு மே மாதம் வரையில் 7,573.70 மில்லியன் ரூபா பெறுமதியிலான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில், சமுர்த்தி வேலைத்திட்டத்திற்கு 414.25 மில்லியன் ரூபாவும், திவிநெகும திட்டத்திற்கு 49.24 மில்லியன் ரூபாவும், கமநெகும திட்டத்திற்கு 68.97 மில்லியன் ரூபாவும், வட, கிழக்கு சமூக விடுதிகள் அபிவிருத்தித் திட்டத்திற்கு 230.85 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கின் துரித மீட்புத் திட்டத்திற்கு 1650.49 மில்லியன் ரூபாவும், உலக உணவுத்திட்டத்திற்கு 33.69 மில்லியன் ரூபாவும், மகிந்த சிந்தனையின் கீழ் முன்பள்ளிகள் அமைத்தல் திட்டத்திற்கு 81 மில்லியன் ரூபாவும், மீள் எழுச்சித் திட்டத்திற்கு 628.04 மில்லியன் ரூபாவும், பரவலாக்கப்பட்ட மூலதன வரவு செலவுத்திட்டத்திற்கு 178.16 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்தது.

வடக்கின் வசந்தம் திட்டத்திற்கு 395 மில்லியன் ரூபா, போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கான துரித திட்டத்திற்கு 2088.56 மில்லியன் ரூபாவும், வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 1755.45 மில்லியன் ரூபாவும் என செலவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .