2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஒப்பந்த அடிப்படையில் 44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (ரஜனி)
வடமாகாண பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வடமாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் அதிகமாக வெற்றிடங்கள் காணப்படும் கல்வி வலயங்களுக்கு குறித்த 44 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ப.விக்னேஸ்வரன், யாழ்.வலயக் கல்வி பணிப்பாளர் செல்வராஜா உட்பட வடமாகாண ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X