2025 ஜூலை 12, சனிக்கிழமை

செப். 10 முதல் 16 வரை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் செப்டெம்பர் 10ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த வாரத்தில், பொதுமக்கள் தமது வீடுகள், அலுவலகங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்கள் ஆகிய இடங்களின் சுகாதாரத்தை பேணவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்படும் நாட்களில், கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கள், அலுவலக மட்ட டெங்கு கட்டுப்பட்டு குழுக்கள், பாடசாலை மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கள், ஆலய மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கள் ஆர்வத்துடனும் செயற்திறனுடனும் தொழிற்பட்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த டெங்கு நோயாளியாக நீங்களோ உங்கள் பிள்ளைகளோ இருக்காதவாறு, வருமுன் காத்து, டெங்கு பரப்பும் நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றாடலின் சுகாதாரத்தை பேணும்படி யாழ்ப்பாண சுகாதார வைத்தியதிகாரி பொன்னுத்துரை ஜெசிதரன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .