2025 ஜூலை 10, வியாழக்கிழமை

யாழில் 11 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் காலபோகத்தில் 11 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 12 ஆயிரத்து 301 ஹெக்டேயர் நெற்செய்கை நிலம் இருக்கின்ற போதிலும் அவற்றில் 2,000 ஹெக்டேயர் வரையான நிலப்பரப்பு நெற்செய்கை மேற்கொள்ள முடியாமல் உவர்நிலமாக இருக்கின்றன.

யாழ்;ப்பாணத்தில் மழை வீழ்ச்சியை நம்பியே நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இம்மாவட்டத்திலுள்ள விவசாயிகளில் 40 வீதமானவர்கள் உள்ளுர் நெல் இனங்களையே பயிரிட்டு வருகின்றனர்.

புதிய நெல் இனங்களை பயிரிடுவதன் மூலம் அதிக விளைச்சலை பெறமுடியும். இருந்தும், யாழ்ப்பாணத்தில் பழைய நெல்லினங்களுக்கேற்ற காலநிலை நிலவுவதால் புதிய நெல்லினங்களின் விளைச்சலில் பாதிப்பு ஏற்படுகின்றது.

காலநிலைக்கேற்ற பாரம்பரிய நெல்லின் உற்பத்தி திறனை மேம்படுத்தி, அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் விவசாய திணைக்களத்தால் தற்பொழுது விதைநெல் தூய்மையாக்கல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த செயற்திட்டத்தின் மூலம் சிறந்த விதைநெல்லை விவசாயிகளுக்கு வழங்கி, அதிக  உற்பத்தியை பெறுவதே தமது நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .