2025 மே 19, திங்கட்கிழமை

குழாய்மூலம் நீர் வழங்கும் திட்டம் 164 மில்லியன் டொலர் ஒதுக்கீடு: யாழ். அரச அதிபர்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
இரணைமடுக் குளத்திலிருந்து யாழ். மாவட்டத்திற்கு குழாய்மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கு 164.04 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாடு முழுவதும் நீர் வழங்கும் பாரிய திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்மூலம் எதிர்காலத்தில் யாழ். குடா நாட்டில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.

யாழ்.குடாநாட்டில் யாழ்ப்பாணம், கொடிகாமம், கரவெட்டி, சாவகச்சேரி ,கோப்பாய், அச்சுவேலி, சண்டிலிப்பாய், சங்கானை, நல்லூர், எழுவைதீவு, மூளாய், பளை, புங்குடுதீவு, கைதடி, அனலைதீவு, பூநகரி, அரியாலை, காரைநகர், வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகமும் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

குளத்தினை ஆழப்படுத்தி திருத்தும் வேலைகள் தற்போது இடம்பெற்று வருவதோடு மலைக்காலம் நெருங்குவதால் அணைக்கட்டை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ். மாவட்டத்திற்கு குழாய்மூலம் நீர் வழங்கும் திட்டத்தின் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைய உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X