2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ் நீதவான் ஜூன் 18, 27ஆம் திகதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு விதித்த கட்டளைகள் மேல்நீதிமன்றினால் ரத்த

Super User   / 2012 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (ஆர்.பரமேஸ்வரன்)

இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களுக்கு  18.06.2010 மற்றும் 27.06.2012 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் நீதவான் பிறப்பித்த கட்டளைகளை  யாழ் மேல் நீதிமன்றம்  இன்று  ரத்துச் செய்து கட்டளை பிறப்பித்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துதல் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி 18.6.2012 மற்றும் 27.06.2012 ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களை தடை செய்யும் கட்டளையை, பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தின் அடிப்படையில் யாழ் நீதவான் எம். கணேசராசா பிறப்பித்திருந்தார்.

மேற்படி ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தவர்கள், இத்தடை தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

இம்மனு தொடர்பாகவே யாழ் மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் இக்கட்டளையை இன்று  பிறப்பித்துள்ளார்.

அமைதிக்கு பங்கம் ஏற்படுவதை தடுப்பதற்காக, குற்றச்செயல் நடவடிக்கை கோவையின் 95 (1) மற்றும் 95(2) பிரிவுகளின் கீழ் பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 14 ஆவது ஷரத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அமைதியாக கூட்டம் கூடும் சுதந்திரம் ஆகிய மனுதாரர்களின் உரிமைகள் மீறப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, சட்டத்தின் அடிப்படையில், 18.06.2010 மற்றும் 27.06.2012 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் நீதவான் பிறப்பித்த கட்டளைகளை ரத்துச் செய்வதாக  யாழ் மேல் நீதிமன்ற ஆணையாளர் தனது கட்டளையில் கூறியுள்ளார்.  மனுதாரர் தனது இணக்கமின்மையை வெறுமனே அந்தரங்கமாக அமைதியாக மாத்திரமல்லால், பகிரங்கமாக சொல்லாலும் செயலாலும் அமைதியான நடத்தை மற்றும் நடவடிக்கையினாலும் வெளிப்படுத்துவதற்கு உரிமையுள்ளவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டளையின் பிரதியை வடபிராந்திய பிரதி  பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்புமாறு நீதிமன்றத்தின் பதிவாளருக்கு யாழ் மேல்நீதிமன்ற ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X