2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்பில் 207 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (எஸ்.கே.பிரசாத்)
செட்டிகுளம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் 207 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் இருந்து அழைத்தவரப்பட்ட இவர்கள் புதுக்குடியிருப்பு கைவேலி கணேச வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை தங்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

207 குடும்பங்கைச் சேர்ந்த 619 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் இவர்களில் 292 ஆண்களும் 327 பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேறியுள்ள மக்களுக்கு முதற் தடவையாக யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தால் 20,000 ரூபா பணமும் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவில் எதிர்வரும் 13ஆம் திகதி  174 குடும்பங்களைச் சேர்ந்த 569 பேர் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X