Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 25 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். மாவட்டத்தில் 22 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் 15,495 குடும்பங்களைச் சேர்ந்த 56,570 பேர் மீள்குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அந்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை 26,981 குடும்பங்களைச் சேர்ந்த 79,907 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலணையில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 376 பேரும் தீவகத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும் காரைநகரில் 114 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேரும் யாழ்ப்பாணத்தில் 872 குடும்பங்களைச் சேர்ந்த 3,399 பேரும் நல்லூரில் 648 குடும்பங்களைச் சேர்ந்த 2,584 பேரும் சண்டிலிப்பாயில் 228 குடும்பங்களைச் சேர்ந்த 737 பேரும் சங்கானையில் 660 குடும்பங்களைச் சேர்ந்த 2,551 பேரும் உடுவிலில் 189 குடும்பங்களைச் சேர்ந்த 698 பேரும் தெல்லிப்பளையில் 9,884 குடும்பங்களைச் சேர்ந்த 35,359 பேரும் கோப்பாயில் 189 குடும்பங்களைச் சேர்ந்த 698 பேரும் சாவகச்சேரியில் 616 குடும்பங்களைச் சேர்ந்த 2,167 பேரும் பருத்தித்துறையில் 110 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேரும் மருதங்கேணியில் 1,606 குடும்பங்களைச் சேர்ந்த 6,669 பேரும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .