2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழில் 25 பேருக்கு டெங்கு

George   / 2014 செப்டெம்பர் 24 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபை சுகாதார வைத்தியதிகாரி இன்று புதன்கிழமை(24) தெரிவித்தார்.

பாசையூர், நாவாந்துறை போன்ற பகுதிகளில் கூடுதலான டெங்குநோய் தொற்று உள்ளானவர்கள் காணப்பட்டதாகவும், உடனடியாக அப்பகுதிக்கு தமது குழுவினர் விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு உரிய நடவடிக்கைகளையும் உதவிகளையும் செய்திருந்ததாக அவர் கூறினார். 

நோய்த்தாக்கம் இனங்காணப்பட்ட பகுதிகளில் நுளம்பை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், இராணுவத்தினருடைய உதவியுடன் துப்பரவாக்கும் பணிகளையும் மாநகர சபை ஊழியாளர்கள் மேற்கொண்டதாகவும் கூறினார்.

டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் விசேடவிதமான நுளம்பை அழிக்கும் நடவடிக்கைகளையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .