Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் நேற்றிரவு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 95 பேரையும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமறு யாழ் மாவட்ட நீதிபதி ஏ.பிரேம்சங்கர் உத்தரவிட்டார்.
இச்சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
யாழ். பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன் சிஹேரவினால் சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடமைக்குச் சென்ற பொலிஸாரை தடுத்து, அவர்களுக்கு இடையூறு விளைவித்ததுடன் அவர்களை தாக்கியதாகவும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாகவும் இச்சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மு.றெமிடியஸ், பொலிஸாரின் குற்றச்சாட்டுகள் சோடிக்கப்பட்டவை என வாதாடினார். அத்துடன் சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரினார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 95 பேரையும் ஓகஸ்ட் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, இச்சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.நீதிமன்றத்திலிருந்து மருத்துவப்பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிறைச்சாலை அதிகாரிகளினால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்படுவதையும் அவர்களது உறவினர்கள் யாழ்.நீதிமன்ற வளாகத்தில் காத்து நிற்பதையும் படங்களில் காணலாம்.
ruban Wednesday, 24 August 2011 04:27 AM
யாழுக்கும் கிரிஸ் வைச்சிட்டாங்க !!
Reply : 0 0
deenmohamed Wednesday, 24 August 2011 07:42 PM
இவைகளுக்கு விமோசனம் கிடைக்காதா? யுத்தம் முடிவடைந்து சமாதான காற்றை நன்றாக சுவாசிக்க முன்னர் மீண்டும் அப்பாவி மக்களை ? .........இவைகளுக்கு இறைவன் தான் பதில் சொல்ல வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago