2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 2,650 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சால், யாழ். மாவட்டத்திலுள்ள 2,650 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.

எரிபொருள் மானிய திட்டத்துக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட உபகரணங்கள் வழங்கும் திட்டத்திலேயே இந்த மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீனவர்கள் தங்கள் வசம் வைத்துள்ள படகுகளின் பெறுமதிக்கேற்ற விதத்தில் மீன்பிடி உபகரணங்களும், பாதுகாப்பு கவசங்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக 18 தொகுதி உபகரணங்கள் தங்களுக்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை 30 மீனவர்களுக்கு விரைவில் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மிகுதி உபகரணங்களும் விரைவில் கிடைக்கப்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .