2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'யாழ். போதனா வைத்தியசாலைக்கு 30 முதல் 40 வரையான பைன் இரத்தம் தேவைப்படுகிறது'

Suganthini Ratnam   / 2011 ஜூன் 26 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உயிர்காக்கும் உன்னதகொடைக்கு அனைவரும் இரத்ததானம் செய்து உயிர்களைக் காக்கும்படி யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் குருதிக் கொடையாளர் கௌரவிப்பு விழா வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இரத்தம் வழங்கினால்த் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலை இன்று காணப்படுகிறது. இரத்ததானம்  வழங்கியவர்கள் பல உயிர்களைக் காத்த உன்னதமானவர்கள். உயிர்காக்கும் உன்னதப் பணியை செய்து வரும் குருதிக் கொடையாளர்களை மனதார வாழ்த்துகிறேன். விஞ்ஞானம் வளர்ந்துகொண்டு செல்லும் நவீன காலத்தில் கூட இயற்கையான குருதி வகைகளை உருவாக்க முடியவில்லை. ஆனாலும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  

யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 30 முதல் 40 வரையான பைன் இரத்தம்  தேவைப்படுகிறது. குருதிக் கொடையாளர்கள் வழங்கும் குருதியில் ஒரு மாதத்திற்கு ஆயிரம் நோயாளர்களின் உயிர் காக்கப்படுகிறது என்றார்.

யாழ்ப்பாணத்தில் ஜந்தாவது தடவையாக இன்றையதினம் நடைபெற்ற குருதிக் கொடையாளர் கௌரவிப்பு விழாவில், 205 குருதிக் கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

இந்த நிகழ்வில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அதிபர் நடராஜா தெய்வேந்திரம், குருதி வங்கிப் பொறுப்பதிகாரி தாரணி, வைத்தியக் கலாநிதிகள், தாதியர்கள் மற்றும் குருதிக் கொடையாளர்களெனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • malwanai maindan Monday, 27 June 2011 01:49 PM

    வரவேற்கின்றோம் இவ்வாறன நிகழ்வுகள் நாடு பூராகவும் நடை பெறவேண்டும் .....
    (மல்வானை மைந்தன்)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X