Suganthini Ratnam / 2011 ஜூன் 01 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
2010ஆம் ஆண்டுக்கான புதிய தேர்தல் இடாப்பு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சு.கருணாநிதியால் நேற்று மாலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
புதிதாக வெளியிடப்பட்ட 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர்கள் இடாப்பில் 331,214 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் மொத்தமாக 484,791 வாக்காளர் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் ஜுலை மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான உள்ளூராட்சிசபை தேர்தலில் 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்படவுள்ளதென சு.கருணாநதிதி கூறினார்.
வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவடைந்ததன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேலை வாய்ப்பு, பல்கலைக்கழக அனுமதிக்கான ஒதுக்கீடுகள், பல்வேறு மட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துமென தெரியவருகிறது.
8 minute ago
49 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
49 minute ago
49 minute ago