2025 மே 19, திங்கட்கிழமை

விவசாயிகளுக்கு 350 ரூபா மானியம் முறையில் உரம் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூலை 23 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)
நாட்டின் விவாசாயத் துறையினை மேம்படுத்தும் நோக்கில் நிர்பாசன முறையினைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 350 ரூபாவிற்கு மானிய அடிப்படையில் உரத்தினை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கமலச்சேவைகள் மற்றும் வனஜீவராசிகள் நலத்துறை அமைச்சர் எஸ்.சந்திரசேன
தெரிவித்தார்.

தெல்லிப்பழையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கமநலச் சேவை நிலைய  திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந் நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. நாட்டை ஆட்சி செய்த எந்த ஒரு அரசாங்கமும் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதையே
பெரும்பாலான அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தலைமையிலான அரசு, நாட்டின் தேசிய உற்பத்திக்கும் அபிவிருத்திக்கும் விவசாயத்துறை பாபாரிய பங்களிப்பு செய்யும் என்பதை உணர்ந்து அதற்கேற்ற திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றது.

நெற் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அவர்களின் நலன் கருதி அரசு 350 ரூபாவிற்கு மானிய அடிப்படையில் உரத்தினை வழங்கியிருந்தது. இதனால் நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் நன்மையடைந்ததோடு தேவையானவற்றை நாம் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் நிர்பாசன முறையினை நம்பி காய்கறிகள், பழவகைகள் செய்கை பண்ணும் விவசாயிகளுக்கும் மானிய அடிப்படையில் 350 ரூபாவிற்கு உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

போர் முடிந்த பின்னர் வடபகுதியில் வீதி அபிவிருத்தி, மின்சாரம், நிர்பாசனம், விவசாயம் போன்ற துறைகள் வளர்ச்சிக் கண்டு வருகின்றன. வடபகுதியில் வாழ்கின்ற விவசாயிகளின் நலன்களுக்காக 500 உழவு இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் இங்குள்ள குளங்கள், கேணிகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

தற்போது இலங்கையில் இருந்து நூற்றுக்கு 15 வீதமான சோளம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இதனை விரிவுபடுத்தும் நோக்கில் வடபகுதியில் 5000 நிலப்பரப்பில் சோளம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 10000 மெற்றிக்தொன் சோளத்தினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X