Suganthini Ratnam / 2011 மே 25 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் அரசாங்க சேவையில் 569 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்கள் பல்வேறு மட்டங்களில் காணப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிராம சேவையாளர்கள் 114, எழுதுவினைஞர்கள் 225, எழுதுவினைஞர்கள் (சுப்ரா) 12, நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்கள் 16, அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்கள் 4, மொழிபெயர்ப்பாளர்கள் 23, அலுவலக உதவியாளர்கள் 128, வாகன சாரதிகள் 11, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 18, பொறியியலாளர்கள் 11, எஸ்.எல்.ஏ.எஸ் பதவிநிலை உத்தியோகத்தர்கள் 7 ஆகிய வெற்றிடங்கள் தற்போது நிலவுகின்றன.
இவையனைத்தும் யாழ். மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்களங்களிலும் காணப்படும் வெற்றிடங்களாகும். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றனவெனவும் யாழ். அரசாங்க அதிபர் கூறினார்.
6 minute ago
47 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
47 minute ago