Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சுழிபுரம் பாண்டவெட்டப் பகுதியில் பாடசாலைச் சிறுமியொருவர் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோரால்; முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் பெற்றோர் வீட்டில் உள்ள வயதான பாட்டியுடன் சிறுமியை வீட்டில் விட்டு கிளிநொச்சி சென்றதாகவும் திரும்பி வந்து பார்த்த வேளை சிறுமி வீட்டில் இருக்கவில்லையெனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை வீட்டில் அருகில் உள்ள கடைஒன்றுக்கு வெற்றிலை வாங்கி வருமாறு அனுப்பியதாகவும் கடைக்குச் சென்ற சிறுமி இன்றுவரை வீடு திரும்பவில்லை எனவும் சிறுமியின் பாட்டியார் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டுப்புலம் மகாவித்தியாத்தில் தரம் மூன்றில் கல்வி கற்கும் கிருஸ்ணமூர்த்தி சாளினி வயது 8 என்ற பாடசாலைச் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago