2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொலை வழக்கில் ஒருவருக்கு 8 வருட சிறை தண்டனை

Super User   / 2012 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

வடலியடைப்பில் குமாரசாமி இராஜசிங்கம் என்பவரின்  கொலை வழக்கின் முதலாம் சந்தேக நபருக்கு யாழ். மேல் நீதிமன்றம் 8 வருட கடுழிய சிறைத் தண்டணை விதித்துள்ளது.

2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் 02 ஆம் திகதி பண்டத்தரிப்பு வடலியடைப்பில் குமாரசாமி இராஜசிங்கம் என்பருக்கு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 4 நபர்கள் மீது சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டது.

இராஜேஸ்வரன் கணேஸ்வரன், சின்னத்துரை சாந்தகுமார், கனகசபை இராஜேஸ்வரன்  கவிதா சாந்தகுமார் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட 4 எதிரிகளும் ஆவர்.

2ஆம் எதிரி வெளிநாடு சென்றதால் அவர் சமூகமளிக்காமலேயே அவருக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸார் உட்பட 4 சாட்சிகளும் இன்று யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தனர்.

யாழ் மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் முதலாம் எதிரிக்கும் 8 வருட கடுழிய சிறை தண்டணை வழங்கி தீர்ப்பளித்தார். ஏனைய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X