Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 24 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சிறைச்சாலையிலுள்ள 8 அரசியல்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 தமிழ் அரசியல்க் கைதிகளும் ஒரு சிங்களக் கைதியுமாக 8 பேர் நேற்று திங்கட்கிழமை மாலை முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக யாழ். சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களெனக் கருதி கைதுசெய்யப்பட்ட அரசியல்க் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குமூலங்களை மேல் நீதிமன்றம் நிராகரித்து வழக்குகளை தள்ளுபடி செய்திருந்தது.
இது நிராகரிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தம்மை இன்னமும் விடுதலை செய்யவில்லையென்று கூறி இவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நான்கு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்கள் தமது விடுதலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .