2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் 8 மாதங்களில் 223 பேர் டெங்கு நோயாளர்கள்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 01 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில்  223 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 19 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டதுடன் இரண்டு போர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ்.பிராந்திய தொற்றுநோய்த் தடுப்பு வைத்திய அதிகாரி எஸ்.சிவகணேஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிராந்திய சுகாதார பணிமனையில் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழில்.டெங்கு நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்து செல்வதுடன் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்கள்  ஒத்துழைப்பு தரவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மலைக்காலம் நெருங்குவதால் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் பொதுமக்கள் தங்களது சுற்றுச் சூழலை மிகவும் தூய்மையாக வைத்திருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்..

சாதாரன காய்ச்சல் ஏற்பட்டாலும் வைத்தியசிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் இதன்போது தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X