2025 மே 19, திங்கட்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 90 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 22 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்,கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 90 பேர் கடந்த வாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 74 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களெனவும் 16 பேர் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்களெனவும் அவர் கூறினார்.

அத்துடன், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபரும்  போதையை ஏற்படுத்தக்கூடிய லேகியங்களை விற்பனை செய்த ஒரு சந்தேக நபரும் சட்டவிரோதமாக மண் ஏற்றிச்சென்ற 2 சந்தேக நபர்களும் குடிபோதையில் வாகனம் செலுத்திய 12 சந்தேக நபர்களும் குடிபோதையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 6  சந்தேக நபர்களும் சூழல் மாசடைதல் தொடர்பில் நடந்த 10 சந்தேக நபர்களும் சட்டத்திற்கு புறம்பான முறையில் மாடு ஏற்றிச்சென்ற 2 சந்தேக நபர்களும் சட்டவிரோதமாக மாடு வெட்டிய 2 சந்தேக நபர்களும் திருநகர் பிரதேசத்தில் 200,000 ரூபா பெறுமதியான தங்கநகைகளை இரவலாக வாங்கிச்சென்று அந்நகையை திருப்பி ஒப்படைக்காது மோசடி செய்த ஒரு சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலும் யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 24,000 ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

இது தவிர,  கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்று  உடைத்து 5,000 ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. பருத்தித்துறையில் 85 வயது மூதாட்டியொருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் அணிந்திருந்த தங்கநகைகள் எதுவும் அபகரிக்கப்படவில்லை. இக்கொலை தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முள்ளியாவளை பிரதேசத்தில் வீடு உடைத்து 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் கிளிநொச்சி, கந்தபுரம் மணியந்தோட்டம் பகுதியில் கடை உடைத்து 837,000 ரூபா பெறுமதியான பொருட்களும்; களவாடப்பட்டுள்ளன.

மாங்குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பாலைமரம் வெட்டிய  5 சந்தேக நபர்களுடன்; 78 பாலைமரத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 7 முதிரைக்குற்றிகளை வைத்திருந்த ஒரு சந்தேக நபர், கட்டுத்துவக்கு வைத்திருந்த ஒரு சந்தேக நபர், கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த 2 சந்தேக நபர்கள், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் திரவங்களை வைத்திருந்த 2 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X