Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மே 25 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மல்லாகத்தில் கடந்த திங்களன்று காணாமல் போனதாகக் கூறப்பட்ட பாடசாலை மாணவன், வரணியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து நேற்று மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் பாடசாலைக்கு நாளாந்தம் அளவுக்கு அதிகமாக பணம் கொண்டுவந்து செலவு செய்வதாகவும் இது தொடர்பில் பெற்றோருக்கு அறிவிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை பாடசாலைக்கு அழைத்து வரும்படியும் பாடசாலை அதிபர் குறித்த மாணவனுக்கு அறிவித்துள்ளார்.
இதனை அடுத்தே மேற்படி மாணவன் வீட்டிற்கு செல்லாது அன்றைய இரவு முழுவதும் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு வரணியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .