2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'ஆதாரம் இருந்தும் மகளை மீட்டுத்தரவில்லை'

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

எனது மகள் இருக்கின்றார் என்பதை ஆதாரத்துடன் காண்பித்தும் எனது மகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் மீட்டுத்தரவில்லை என காணாமற்போன பாடசாலை மாணவியொருவரின் தாயார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் எனது மகள் இருக்கும் படம் உள்ளது. அந்த துண்டுப்பிரசுரத்துடன்,பலத்தரப்பிடம் சென்றேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அதைக் காண்பித்தேன். நான் ஆதாரத்தைக் காட்டியும் மகளை மீட்டுத்தராமல் இருக்கின்றனர்.

எனது பிள்ளையை வெளிப்படுத்தினால்,காணாமற்போன அனைவரையும் பற்றி வெளிப்படுத்த வேண்டும் என நினைத்து செயற்படுகின்றார்களோ என எண்ணத்தோன்றுகின்றது.

இறுதியாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து எனது மகள் ஜனாதிபதிக்கு அருகில் நிற்கும் படத்தை காட்டி எனது மகளை மீட்டு தாருங்கள் என கோரினேன்.

அதற்கு அவர் 20 நாட்கள் அவகாசம் கோரி இருந்தார். அவரின் அவகாசம் முடிய இன்னமும் ஐந்து நாட்களே உள்ளன. எனது மகளை மீட்டு தருவார் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .