2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'காங்கேசன்துறை காணிகள் அடுத்த மாதம் விடுவிக்கப்படும்'

George   / 2017 மார்ச் 28 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருக்கின்ற, பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள், படிப்படியாக விடுவிக்கப்படும். அத்துடன், காங்கேசன்துறையின் சில பகுதிகள்  அடுத்த மாதம் விடுவிக்கப்படும்” மேஐர் ​ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியான ​செயற்பட்ட மேஐர் ​ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் பிரியாவிடை நிகழ்வு, யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை (27) நடைபெற்றது.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  இதனைக் கூறிய மகேஸ் சேனாநாயக்க, தொடர்ந்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இதுவரையில் விடுவித்திருக்கின்றோம். தொடர்ந்தும் நிலங்களையும் விடுவிக்க உள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என்றார்.

மேலும், பாதுகாப்பு படையினர், யாழ். மாவட்ட மக்களுக்கு ஒரு நம்பிக்கைகரமான செயற்றிட்டத்தினை முன்னேடுத்துள்ளனர். மக்களிடம் பயன்படக்கூடிய வகையில் இவ் காணிகளை நாங்கள் வழங்கியுள்ளோம். எனவே, எதிர்வரும் எப்ரல் மாதம் யாழ். மாவட்டத்தின் காங்கேசன்துறை முகப்பகுதியின் சில இடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X