2025 ஜூலை 30, புதன்கிழமை

5 வருடங்களுக்கான திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில், யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 5 வருடங்களுக்கான திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க கலந்துகொள்வதாக இருந்தும் அவர் கலந்துகொள்ளவில்லை.

அலுவலகத்தின் பணிப்பாளர் சந்திரசேன மாலியத்த, சந்திரிக்காவின் செயலாளர் ஜெயசிங்க ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,  

மக்கள் கருத்துக்களை உள்வாங்குதல், எந்தத்திட்டம் முக்கியம் என்பது, விடுபட்ட திட்டங்களை இணைத்துக் கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அவசர கதியில் செய்ய வேண்டிய திட்டங்களை இனங்கண்டு செயற்படுத்துவதற்கான நடவடிக்கையை தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் மேற்கொள்ளும் என இதன்போது கூறப்பட்டது.

அந்தவகையில் தண்ணீர் மற்றும் வீதி திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்து, திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .