2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு: விமலசேன

Kanagaraj   / 2014 ஜூன் 13 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவார காலப்பகுதிக்குள் 10 இலட்சத்து 12 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம், நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

யாழ்;.பொலிஸ் தலைமையகத்தில் நடைபெறும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற போது  அவர் இவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியும், கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீடு உடைத்து 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா தங்க நகைகளும், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீட்டை உடைத்து உட்புகுந்த திருடர்கள் 1 இலட்சத்து 47 ஆயிரம் ரூபா பணமும், கொடிகாமம் பொலிஸ் பிரிவினுள் 20000 ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரமும் மற்றும்  3 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும், ஊர்காவற்றை பொலிஸ் பிரிவில் 18 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய இரண்டு ஆடுகளும் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தனர்.

இவற்றில், நீர் இறைக்கும் இயந்திரமும் திருடியவர்கள் என வரணியினைச் சேர்ந்த இருவர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தினாலும், கோண்டாவிலில் 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா தங்க நகைகள் திருடிய ஒருவர் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், மற்றய திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .