Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டச் சந்தைகளில் வியாபாரத்தில் விவசாயிகளிடம் இருந்து அறவிடப்படும் 10 சதவீத விலைக் கழிவு, ஒக்டோபர் 1ஆம் திகதியில் இருந்து அறவிடப்படமாட்டாதென, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில், அண்மையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டத் தீர்மானத்துக்கமையவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென்றார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கடிதம் மூலம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago