Freelancer / 2022 மார்ச் 08 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 11 மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் விடுவித்து விடுதலை செய்தார்.
மீனவர்களுக்கு 18 மாத சிறைத்தண்டனையை 10 மாதங்கள் ஒத்திவைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்று படகுகள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் தேதி தவணையிடப்பட்டுள்ளது. (R)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago