2025 ஜூலை 17, வியாழக்கிழமை

12 வயது சிறுவன் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, கி.பகவான், ற.றஜீவன்

யாழ்ப்பாணம், வரணி, இடைக்குறிஞ்சியிலுள்ள வீடொன்றில் இருந்து 12 வயது சிறுவனொருவரின் சடலம், அவனது வீட்டிலிருந்து இன்று வியாழக்கிழமை (14) காலை மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார்.

மனோகரன் தனுராஜ் (வயது 12) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். வீட்டில் பெற்றோர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அச்சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X