2025 மே 15, வியாழக்கிழமை

142 கிலோகிராம் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 30 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
 
சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (29) சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது அங்கு பதிக்கிவைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் நிறை 142 கிலோ 945 கிராம் எனவும், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கஞ்சா போதைப்பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .