Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதன் காரணமாக, நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மூன்று சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களுக்கான வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று (18) எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நீரியல்வளத் துறையினரினால் 19 பேருக்கு எதிராகவும் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 06 மாத சாதாரண சிறை தண்டனைப்படி, 18 மாத சிறைத் தண்டனை விதித்து அதை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி படகு ஒன்றில் நான்கு மீனவர்களும், 30ஆம் திகதி ஒரு படகில் மூன்று மீனவர்களும், இம் மாதம் 2ஆம் திகதி ஒரு படகில் 12 மீனவர்களுமாக 19 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதில் 30ஆம் திகதி கைது செய்யப்பட்ட படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதனால் அப்படகு அரசுடமையாக்கப்பட்டது.
மற்றைய இரு படகின் உரிமை கோரும் வழக்கு, 15.07. 2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago