2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

2009க்குப் பின்னர் மீள்குடியேறியோருக்கு இந்திய வீடுகள் வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமாக 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக யாழ் மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதற்கென தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் பயனாளிகள் தெரிவில் பல்வேறு குழப்ப நிலைகள் காணப்பட்டதால் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்திய வீட்டுத்திட்டத்தை முதற்கட்டமாக 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியமர்ந்தவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதையடுத்து யாழ் மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டுக்குப்பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் விபரங்கள் பிரதேச செயலக ரீதியாக மீள்பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.

குறிப்பாக நலன்புரி நிலையத்தில் இருந்ததை உறுதிப்படுத்தும் குடும்ப அங்கத்தவர் அட்டை, நலன்புரி நிலையத்தில் வைத்து வழங்கப்பட்ட அடையாள அட்டை, மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட பணக்கொடுப்பனவுச் சான்றுதல் என்பன பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.

அவ்வாறு மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின்னரும் புள்ளித்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளதுடன் அடுத்த வருட தொடக்கத்தில் பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன் இந்த வீட்டுத்திட்டத்தில 2009ஆம் வன்னியுத்தத்திற்கு பின்னர் யாழ்குடாநாட்டில் மீள்குடியேறியோர், உயர்பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் மீள்குடியேறியோர், இந்தியாவில் இருந்து மீள்குடியேறியோர் போன்றோர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X