2025 மே 21, புதன்கிழமை

யாழில் முதன்முறையாக இந்து, பௌத்த கலாசாரப் பேரவையின் அங்குரார்ப்பணம்

Suganthini Ratnam   / 2011 மே 24 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இந்து, பௌத்த கலாசாரப் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ். கந்தர்மடம், பழம் வீதியில் நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் வண. அத்துரளிய ரத்தினதேரர் மற்றும் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரசிங்கவினாலும் திறந்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் வண. அத்துரளிய ரத்தினதேரர்,  மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரசிங்க, தென்னிலங்கையிலிருந்து  வந்த பௌத்த பிக்குகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலரும் யாழ்ப்பாணம் பலாலி வீதியிலிருந்து பாடசாலை மாணவர்களின் மேற்கத்தேய வாத்திய இசை முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .