Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2011 மே 24 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.மாவட்ட செயலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக விசேட மாநாடு ஒன்று இன்று செவ்வாய்கிழமை காலை யாழ். இந்து பௌத்த கலாசாரப் பேரவையினால் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கு எடுக்கவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இம் மாநாட்டைத் தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு அலுவலகம் ஒன்றும் யாழ்.மாவட்ட செயலகத்தில் திறக்கப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இம் மாநாட்டில் யாழ்.இந்து பௌத்த கலாச்சாரப் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .