2025 மே 21, புதன்கிழமை

யாழ். சிறைக் கைதிகளின் உண்ணாவிரதம் முடிவு

Kogilavani   / 2011 மே 25 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 8 தமிழர் அரசியல் கைதிகள் தமது போரட்டத்தை இன்று புதன்கிழமை நிறைவு செய்துள்ளனர்.

இந்து பௌத்த கலாசார பேரவையின் செயலாளர் எஸ்.இராமச்சந்திரன் யாழ். சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்தை பார்வையிட்டபோது வழங்கிய உறுதிமொழியை அடுத்தே இக் கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்து பௌத்த கலாசார பேரவையின் செயலாளர் எஸ். இராமச்சந்திரன் ஜனாதிபதியை சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசுவதாக உறுதிமொழி வழங்கியதுடன் கைதிகளுக்கு குளிர்பானம் வழங்கி இப்போரட்டத்தை நிறைவுக்கு  கொண்டு வந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .