Menaka Mookandi / 2011 மே 25 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்தால் தான் தழிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அரசியல் தீர்வுத் திட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என இந்து, பௌத்த கலாச்சார பேரவையின் செயலாளரும் புலம்பெயர் மக்களுக்கான இலங்கை ஆலோசகருமான எம்.ரீ.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை யாழ். இந்து, பௌத்த கலாச்சாரப் பேரவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
'தழிழ் மக்களின் உரிமைகள் குறித்து புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும்.
தழிழர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அவர்களின் தழிழ் அரசியல் கட்சிகளுடன் மட்டும் பேச்சு வார்த்தை நடத்தினால் போதாது. புலம்பெயர்ந்து வாழும் தழிழர்களுடனும் பேசி மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்து, பௌத்த கலாச்சாரப் பேரவை ஒரு அரசியல் கலப்பு இல்லாத அமைப்பாகும். யாழில் சமூக சேவையை அடிப்படையாகக் கொண்டு தழிழ் மக்களுக்கு சேவையாற்றவே இந்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேரவை மதமாற்று நடவடிக்கையில் எக்காலத்திலும் ஈடுபடமாட்டாது. அதற்கான உறுதியினை நான் அளிக்கின்றேன்' என்றார்.
8 minute ago
49 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
49 minute ago
49 minute ago