2025 மே 21, புதன்கிழமை

நெடுங்கேணி தபாலகம் திறப்பு

Menaka Mookandi   / 2011 மே 25 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 7.6 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுங்கேணி தபால் நிலையம் இன்று புதன்கிழமை காலை அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவினால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக சேதமடைந்திருந்த மேற்படி தபாலகம் நெடுங்கேணி - புளியங்குளம் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிலையிலேயே இன்று அது திறந்துவைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலி பாபா பாறூக், மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், ஜனாதிபதியின் இணைப்பாளர்கள் சிவநாதன் கிஷோர், சி.கனகரத்தினம், தபால்மா அதிபர் கே.பி.திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .