Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மே 25 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
ஐக்கிய இலங்கையில் தமிழர் மரபுவழிப் பிரதேசங்களுக்குள் அம்மக்களால் ஆளப்படுகின்ற சுயாட்சிதான் தழிழ் மக்களுக்கான தீர்வாக இருக்கின்றது.
இதனால் தமிழர்களது கோரிக்கைகள் அடங்கிய பிரேரனைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து அது குறித்த பேச்சுவார்த்தைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட வேண்டும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.சிறிகாந்தா தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
'இந்திய அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நம்புவதினால் தமிழருக்கு மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறு இடம்பெற வாய்ப்புள்ளது. தமிழர்கள் சோனியா காந்தியின் அரசாங்கத்தை நம்பி ஏமாந்தது போதும்.
சர்வதேச அரங்குகளில் தமிழர் பிரச்சினைகள் தற்போது ஆராயப்பட்டுக்கொண்டு வருகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபடும் போது தமிழர் பிரச்சினைகள் குறித்து ஒரு தீர்வுத்திட்ட யோசனையை முன்னைத்துத்தான் பேச வேண்டும்.
பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையில்லை என்றால் பேச்சு மேசைகளில் இருந்து வெளியேற வேண்டும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து பேசுவதற்கான காலம் கனிந்துள்ளது. அதனைத் தவறவிடாமல் பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழர் தரப்பின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த பேச்சுவார்த்தைகளில் சர்வதேச சமூகத்தினது பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதுடன் ஐக்கிய நாடுகளின் பங்களிப்புடன் தமிழருக்கு தீர்வு கிடைக்கக்கூடிய வழிகள் பற்றி யோசிக்க வேண்டும்.
அத்தோடு இனப்பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தைகளின் போது எடுக்கப்படுகின்ற முடிவுகள் குறித்து வெளிப்பாட்டுத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .