2025 மே 21, புதன்கிழமை

'யாழ். கலாசாரத்தை முறையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு'

Suganthini Ratnam   / 2011 மே 26 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தனித்துவமான பண்புகளைக் கொண்ட யாழ்ப்பாண சமூகத்தின்  கலாசாரம்   வேறெங்கும் காணமுடியாதளவுக்கு வியாபித்திருக்கிறது. இதனை முறையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் உள்ளதென யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இந்து, பௌத்த கலாசார பேரவையின் யாழ். அலுவலக திறப்பு விழாவையொட்டி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமானதொரு சூழலில் நான் இங்கு கடமையாற்றுகின்றபோது இன,மத பேதங்கள் எதனையும் நான் இங்கு சந்திக்கவில்லை. அனைவரும் சகோதரத்துவமாக இருக்க வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

சமூகங்களுக்கிடையில் ஒரு உறவுப்பாலத்தை வளர்ப்பதற்கு இந்து, பௌத்த கலாசார பேரவை தனது சேவையை வழங்க வேண்டும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .