Super User / 2011 மே 26 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
2600 சம்புத்தத்வ ஜந்திக்கு முன்னிட்டு மாத்தறையில் நடைபெற்ற 'வெசாக் வலயத்தை' பார்வையிடுவதற்கு வடக்கில் வசிக்கும் தமிழ் இளைஞர் யுவதிகள் பலர் அழைத்து வரப்பட்டனர்.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் யோசனையின்டி இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை இணைந்து ஏற்பாடு செய்த இப்பயணத்தில் வடக்கில் தொழிற் பயிற்சி பெறும் இளைஞர் யுவதிகள் சுமார் 150 பேர் பங்குபற்றினர்.
இப்பயணத்தின் நோக்கம் வடக்கு மற்றும் தெற்கில் மத மற்றும் கலாச்சார ஒற்றுமையை அபிவிருத்தி செய்வதே என அமைச்சர் கூறினார்.
தான் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் போது தெற்கிலிருந்து வடக்கில் 'உறவுப் பயணம்' மேற்கொள்வதற்கு 'உத்துரு மித்துரு சிந்தனையை' அறிமுகப்படுத்தியதன் நோக்கமும் இவ் வடக்கு மற்றும் தெற்குக்கிடையில் ஒற்றுமையை அபிவிருத்தி செய்வதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கில் ஒரு வார காலம் பயணம் மேற்கொண்ட இளைஞர் யுவதிகள்' வெசாக் கூடு அமைத்தல் மற்றும் வெசாக் வலயம் என்பற்றை பார்வையிட்டதுடன் மற்றும் தெற்கில் சிறுசிறு பயணங்களையும் மேற்கொண்டனர்.
இப்பயணத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நாட்டிற்கு சமாதானத்தை கொடுத்த ஜனாதிபதிக்கும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் மேற்படி இளைஞர் யுவதிகள் நன்றி தெரிவித்தனர்.
இவ்வடக்கு இளைஞர் யுவதிகளை சந்தித்த நிகழ்ச்சி மாத்தறையில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் நடைபெற்றது..jpg)
.jpg)
8 minute ago
49 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
49 minute ago
49 minute ago