Suganthini Ratnam / 2011 மே 27 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். ஊர்காவற்துறை மூன்றாம் கட்டைப்பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் ஒருவர் மரணமாகியுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்துறை மூன்றாம் கட்டைப்பகுதியைச் சேர்ந்த விவசாயியான கதிரமலை கந்தசாமிப்பிள்ளை (வயது 62) என்பவரே மரணமானவரென உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவரது சடலம் தற்போது ஊர்காவற்துறை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது மரணம் குறித்த மருத்துவப் பரிசோதனை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago