Suganthini Ratnam / 2011 மே 27 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் அரசாங்க மாவட்ட செயலகத்திலும் அரசாங்க திணைக்களங்களிலும் யுத்த வெற்றிக் கொண்டாட்டமென்று எதுவும் இல்லையென்பதுடன், அவ்வாறு நடத்துமாறு அரசாங்கத்திடமிருந்து தனக்கு எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லையெனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இரண்டாவது வருட யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இக்கொண்டாட்டம் பற்றி அந்த மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
யுத்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கான ஒரு நிகழ்வுகளும் இங்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. அரசாங்கம் அறிவித்திருந்தால் அரசாங்க அதிகாரிகளான நாங்கள் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்துவோமெனவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெறும் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தனக்கு அமைப்பிதழ் வந்துள்ளது. வேலைப்பளு காரணமாக தான் செல்லவில்லையெனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago